நெல்லியடி காவல் நிலைய அவல நிலையை அமைச்சர் விஐயகலா நேரில் பார்வையிட்டார்

யாழ் குடா நாட்டில் தனியார் காணிகளிலும் வீடுகளிலும் பொலிசார் பொலிஸ் நிலையங்களை நடாத்தி வருகின்றமையை கடுமையாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்த்து வருகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களோ அங்கயன் இராமநாதனோ வடமராட்சி மக்களின் அவலத்தை பார்வையிடாத நிலையில் தேர்தல் காலத்துக்கு வாக்கு வேட்டைக்கு மட்டும் வடமராட்சி வந்து செல்லும் நிலையில்  30.01.2016 அதிக நேரத்தை வடமராட்சியில் செலவு செய்த அமைச்சர் யாழ் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர்-முதியோர் இல்லம் மற்றும் நெல்லியடி காவல் நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

வடமராட்சியில் ஜ.தே.கட்சிக்கு வாக்கு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும், யாழ் மாவட்ட முதல் தமிழ் பெண் ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முதலாவது ( யாழ் மாவட்டத்தின் தமிழ் பெண் அமைச்சருமான ) சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் நெல்லியடி காவல் நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

தேவையான கணனி வசதி,  மடி கணனி வசதி, செய்மதி தொலைக்காட்சி வசதி , தொலைக்காட்சி வசதி , தட்டச்சு வசதி , தொலை நகல், உணவக வசதி , போதிய பிற வசதிகள் , குடிநீர் வசதி, மேலும் கணனி மயப்படுத்தபட்ட குடித்தொகை கண்கானிப்பு வசதி , போன்ற சாதாரன காவல் நிலையங்களுக்கு தேவைப்படும் எந்த வசதிகளும் இல்லாத நிலையில் நெல்லியடி காவல் நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர்.

நெல்லியடி காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் வேகமாக சென்று சேவை செய்ய போதிய வாகனங்கள் இல்லை. வேகமாக சென்று சேவை செய்ய போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. பொலிசார் துவிச்சக்கர வண்டியில் சென்று தமது சேவையை செய்யவேன்டிய நிலை தொடர்கிறது. வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் போலீஸாரும், புகார் தரும் மக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

யாழ் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர்-முதியோர் இல்லம்

யாழ் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர்-முதியோர் இல்லம்

போதிய சர்வதேச தரத்தில் வசதி இல்லை. இதுநாள் வரை வாடகை கட்டிடத்தில்தான் காவல் நிலையம் இயங்கி வருகிறது. காவல் நிலையத்துக்குரிய போதிய வசதிகள் இங்கு கிடையாது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்தில் அடிப்படை வசதியில்லை. இதுதவிர போதிய இடவசதி இல்லாமல் உள்ளன. இந்த அவல நிலையை அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன்  நெல்லியடி காவல் நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

நெல்லியடி வளர்ச்சி பெற வேண்டும் எனில், அந்த நெல்லியடி மக்கள் வளம்பெற வேண்டும் எனில், நெல்லியடி  பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். 

ஒரு பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். நெல்லியடி அமைதியான சூழ்நிலை நிலவுவதை உறுதி செய்வதில் காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 

மாறிவரும் சமூகச் சூழ்நிலைக்கேற்ப காவல் நிலையங்கள் தனியார் கட்டிடங்களில் இயங்குவதால் பெண்களை விசாரிக்க தனி அறையும் இல்லாத நிலையே உள்ளது. 

இந்தியாவில் இருந்து கடல் ஊடாக வரும் மீனவர் உட்பட கைதிகளை பாதுகாப்புடன் வைப்பதிலும் சிக்கல் உள்ளது. மேலும் கழிவறை வசதியும் சர்வதேச தரத்தில் இல்லாமல் தான் உள்ளது. 

நெல்லியடி காவல்நிலைய கட்டிடம் சிதலமடைந்து கிடப்பதை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன்  நெல்லியடி காவல் நிலையத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் ஒரு தூய்மையான, பாதுகாப்பான காவல்நிலைய கட்டிடம் இல்லாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் பெரும்பாலான கிராமங்கள் அடங்கும். 

இந்த கிராம பகுதிகளில் உள்ளவர்களின்  நலனுக்காக கொண்டு வந்த காவல் நிலைய கட்டிடத்தின் அவல நிலையை பார்த்து பொதுமக்கள் முணுமுணுத்து வருகின்றனர். 

இங்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வருவதாகவும், இந்த கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்பதே தெரியவில்லை. அதே கட்டிடத்தில் தான் பெண் காவலர்களும் பணியாற்றி வருகின்றனர். 

வடமராட்சியில் ஜ.தே.கட்சிக்கு வாக்கு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசுக்கு கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக தனியார் காணியில் ஓலைக் கொட்டில்களிலும் உக்கிய தகர கூரைகளிலும் இருந்து வந்த பருத்தித்துறை பொலிஸ் நிலையம் தற்போது நவீன வசதிகளுடன் சொந்தக் காணியில் பல மில்லியன் ரூபா செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அழைப்பின் பேரில், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்னிலையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாறப்பனவினால் திறந்து வைக்கப்பட்டது.

உலக நாடுகளின் நன்கொடை உதவியுடன் யாழ் குடா நாட்டில் தனியார் காணிகளிலும் வீடுகளிலும் யாழ் குடா நாட்டிலும் வடமாகாணத்திலும் ஆக்கிரமித்து இருக்கும் பொலிஸ் நிலையங்களை புதிய நவீன முறையில் சொந்த காணிகளில் சொந்த கட்டிடத்தில்  கட்டி கொடுப்பதற்கு கடும் முயற்சிகளை அரசு ஊடாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  எடுத்து வருகின்றார்.

யாழ் குடா நாட்டில் தனியார் காணிகளிலும் வீடுகளிலும் பொலிசார் பொலிஸ் நிலையங்களை நடாத்தி வருகின்றமையை கடுமையாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்த்து வந்தமை குறிப்பிடதக்கது.

யாழ் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர்-முதியோர் இல்லம்

யாழ் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர்-முதியோர் இல்லம்