தெருவில் அலையும் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள்?

யாழ்ப்­பாணம் மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­களில் கட்­டாக்­காலி நாய்களை மாநகர சபை ஆணையாளர் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எதனையும் மேற்­கொள்­ளவில்லை.

மாந­கர சபை எல்­லைக்குள் பிரதான வீதிகளில் சாதாரணமாக கட்டாக்­கா­லி­ நாய்கள் திரிகின்றன.

இதனை மாநகர சபை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. இதனால் தினமும் விபத்துக்கள் இடம்பெறுகின்றன. வீதியில் செல்வோர் கூட நாய்க்கடிக்கு இலக்காகின்றனர்.

அத்துடன ஆடு, மாடு உள்ளிட்டவைகளும் கட்டாக்காலிகளாக உலாவுகின்றன.இவற்றை பிடிக்­கப்­பட்டு மாந­கர சபைக் கட்­டளைச் சட்­டத்­திற்கு அமை­வாக தண்டம் அற­வி­டவேண்டும்.

இதனை பிடித்து ஏழு நாட்­க­ளுக்கு மேல் உரிமை கோரப்­ப­டாத கால் நடைகள் ஏலத்தில் விற்­பனை செய்­யப்­படும் அல்லது உரி­மை­யா­ளர்களை அழைத்து கால்­ந­டை­களைக் கட்டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கு­மாறும் ; யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.