தமிழ் தெரியாத உறுப்பினர் ஆனோல்ட்?

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் ஆனல்ட் அமைச்சராகும் ஆசையில் இடம்மாறி அமர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

கூட்ட மேசைகளில் பெயர் தாங்கிய பலகையுடன் பல இருக்கைகள் இக்கூட்டத்திற்காக மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இக்கூட்டத்திற்கு வந்த அனைவரும் தங்களது பெயர்களை உடைய பெயர் பலகைகளை இனங்கண்டு அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆனால் வட மாகாண சபை உறுப்பினர் அவரது பெயர் பொறித்திருந்த பெயர் பலகையில் அமராது சுகாதார அமைச்சரின் பெயர் பலகை இருந்த இடத்தில் சென்று அமர்ந்தார்.

அத்துடன் அமர்ந்தது தவறு என கொள்ளாது அந்த இடத்தில் இருந்த பெயர் பலகையை அகற்றினார்.

எனினும் இவரது பெயர் பொறித்த பலகை மற்றுமொரு மாகாண சபை உறுப்பினர் கஜதீபனிற்கு அருகில் அனாதையாக கிடந்தது.

மேலும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் முழுக்க பெயர் பலகைகளை தமிழிலே எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருந்தும் உறுப்பினர் ஆனோல்ட் தமிழ் தெரியாதோ என்னவோ என அருகில் இருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.