தெல்லிப்பளையில் மனித உடல்கள் வேள்வி!!

வேள்விக்கு கொடுக்கப்படுவது போன்ற நிகழ்வு நடப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தெல்லிப்பளையில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றமை பற்றி பல ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டும் சுகாதாரதுறையினர் அசமந்தமாக உள்ளமை கவலைக்குரியதொரு விடயம்.

 மக்களின் உடல்கள் டெங்கு நுளம்பிற்கு இரையாக விடப்பாட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இது இவ்வாறிருக்க ஆண்டிறிதிக்கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக சுகாதாரபணிமனையில் கொண்டாடப்பட்டுள்ளது.

மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள அப்பகுதி சுகாதார அதிகாரியின் அண்மைக்கால செயற்பாடுகள் கவலையளிப்பதாக உள்ளமை எமது ஊடகத்திற்கு பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களின் சுகாதாரத்தை கவனிக்கவேண்டியவர்கள் அதனை கவனிக்காது விடுகின்றபோது தேவையற்ற தலையீடுகள் உட்பட வெளித்தலையீடுகளும் தவிர்க்கமுடியாததொன்றாகிவிடும்.

திருமதி.மதுசேனா -- jaffnatips@gmail.com