சிசிஎல் கிரிக்கெட் போட்டி: தெலுங்கு வாரியர்ஸ் அணியில் ஸ்ரீசாந்த்

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி இந்த வருடம் ஜனவரி 23ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, சண்டிகர், உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடக புல்டோசர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டீ சேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை அணியை சேர்ந்த ஜீவா, ஷாம், பரத், சாந்தனு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இவர் இந்த வருடம் தெலுங்கு வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். தெலுங்கு வாரியர்ஸ் அணியில் பயிற்சியாளராக இடம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.