சிறுப்­பிட்­டியில் குடும்­பஸ்தர் சட­ல­மாக மீட்பு

சிறுப்­பிட்­டியில் தனி­மையில் வசித்து வந்த குடும்­பஸ்தர் நேற்று சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். இறந்த நிலையில் காணப்­பட்ட இவர் சிறுப்­பிட்டி மத்தி அம்மன் வீதியைச் சேர்ந்த அப்­புக்­குட்டி இரா­ச­துரை (வயது 55) என்­ப­வ­ராவார்.

மனைவி மற்றும் பிள்­ளைகள் வெளி­நாட்டில் வசித்­து­வரும் நிலையில் தனி­மையில் வசித்து வந்த இவரின் நட­மாட்­டத்தை காண­வில்­லை­யென வியா­ழக்­கி­ழமை இரவு அவ­ரது உற­வி­னர்கள் வீட்­டுக்குச் சென்று அவ­தா­னித்த போது இறந்த நிலையில் கிடப்­பது கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

ஸ்தலத்­துக்கு வந்த அச்­சு­வேலி பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­தை­ய­டுத்து சடலம் உடற்­கூற்று பரி­சோ­த­னைக்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டது.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.