யாழ்ப்பாணம், திக்கத்தை விற்க மாவை சதி!

யாழ்ப்பாணம், வடமராட்சி, திக்கம் வடிசாலையை இந்திய தனியார்த்துறை நிறுவனமொன்றுக்கு விற்பதற்கு மாவை சேனாதிராஜா இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்படி இந்த வடிசாலை விற்கப்பட்டால், சீவல் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைவர். இவர்களது உற்பத்திகளைப் புறக்கணித்துவிட்டு, இந்தியாவில் இருந்து செயற்கை மூலப்பொருட்களை தருவித்து சாராய உற்பத்திகள் மேற்கொள்ளப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால், உள்ளூர் கள்ளை இந்திய நிறுவனம் நிராகரிக்கும். 

ஒரு சில கோடி ரூபா கொமிசனுக்காக மாவை திக்கம் வடிசாலையை விற்பதால் சீவல் தொழிலாளிகளே பெரும் பாதிப்பை அடையக்கூடும். இதனால் இதனைத் தடுப்பதற்கு அனைவரும் முன்வருவது அவசியம்.