ஆலயத்திலிருந்து 40 இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குகள் திருட்டு

யாழ். கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள காளி கோவில் ஒன்றிலிருந்து 20 இலட்சம் பெறுமதியான இரு வலம்புரி சங்குகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மேற்படி கொள்ளைச் சம்பவமானது இன்று (சனிக்கிழமை) அதிகாலை வேளையில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை ஆலயத்தை திறந்த ஆலய பூசகர் அங்கு வைக்கப்பட்டிருந்த வலம்புரி சங்குகளை காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளையிடப்பட்ட குறித்த வலம்புரி சங்குகள் இரண்டும் 40 இலட்சம் பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்படி திருட்டுச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.