வழித்தட அனுமதி இல்லாது கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து பூநகரியில் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அதி வேகமாக பூநகரிப் பாதையால் City Line சொகுசு பேரூந்து( 62-5236  )வழித்தட அனுமதி இல்லாது அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த போது அப் பாதையால் சென்று கொண்டிருந்த சல்லி ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உழவு இயந்திரச் சாரதி உடல் நசுங்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோதுடண்ட  சிற்றிலிங் பேரூந்துக்கும் அதே வழியால் வந்துகொண்டிருந்த பி.கே. எக்ஸ்பிரஸ் பஸ்வண்டிக்கும் வழித்தட அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் பூநகரிப் பாதையால் கள்ளமாகச் சென்று கொண்டிருந்த போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. வழித்தட அனுமதி இல்லாது கொழும்பு -  யாழ் சேவையில் ஈடுபடும் பஸ்களின் விபரங்களை ஆதாரபூர்வமாக பஸ் இலக்கங்களுடன் நாம் எமது இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தோம். அத்துடன் இவ்வாறான பஸ்கள் எவ்வாறு சேவையில் ஈடுபடுகின்றது என்பதையும் விபரமாகத் தெரிவித்திருந்தோம்.
http://newjaffna.com/news/465

இருப்பினும் இந்த பஸ்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு பொலிசார் தாமதித்ததன் காரணமாக அநியாய உயிரிழப்புக்களும் காயங்களும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்புக்களுக்கு பொலிசாரே பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சமூகப் பொறுப்புடன் கடும் சிரமத்திற்கம் சவால்களுக்கும் மத்தியில் நாம் புலனாய்வு செய்து எடுத்து வெளியிட்ட அனுமதிப்பத்திரங்கள் இல்லாது ஓடும் பஸ்களின் விபரங்களைக் கூட பொலிசார் கவனத்தில் எடுக்கவில்லை என்பது அவர்களின் தாமதமான செயற்பாட்டைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

போட்டி போட்டு ஓடி விபத்தை ஏற்படுத்த பஸ்களில் ஒன்றான பி.கேஎக்ஸ்பிரஸ்( ND7043 ) பஸ்சின் முதலாளியான சாவகச்சேரியைச் சேர்ந்த பங்கஜன் என்பவன்  தனது தவறான நோக்கத்திற்காக அப்பகுதிப் பொலிசாருக்கு உதவி புரிவது என்ற போர்வையில் செயற்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. அவன் தனது காரைப் பொலிசாரின் தேவைகளுக்கும் பயன்படுத்த அனுமதித்து இவ்வாறான செயற்பாடுகளைச் செய்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்துத் தொடர்பாகவும் இந்த விபத்தில் சேதத்தை ஏற்படுத்தி பஸ்களின் விபரங்களும் புகைப்படங்களும் வெளியிடுவதற்கு முயற்சி செய்துள்ளோம்.

இதே போலவே அனுமதிப்பத்திரம் இல்லாமல் கீழே காணப்படும் இலக்கங்கள் உள்ள பஸ்கள் கொழும்பு யாழ் சேவையில் ஈடுபட்டு பயணிகளுக்கு பெரும் தொல்லைகளைக் கொடுத்து வருவதாக தெரியவருகின்றது. 

NA8697. ND8535. ND8105. ND7043. ND9995.  ND9999. ND0140. NA7827. 62-5236. NA7824

 பஸ்களை நடுக்காட்டுக்குள் நிறுத்தி விட்டு பயணிகளை மிகவும் தொல்லைக்கு உள்ளாக்குவதும் மேலே குறிப்பிடப்பட்டு்ளள இலக்கங்களை உடைய பேரூந்துகளே ஆகும்