கச்சேரிக்குப் பக்கத்தில் 4 சாராயக்கடைகள்!! - யாழ் அரசாங்க அதிபர் பகிடிக் கதை கதைக்கிறார்!!

யாழ்ப்பாணத்தில் சட்டவிதிமுறைகளுக்கு புறம்பான வகையில் இயங்கும் சில மதுபான சாலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

இவற்றில் முதற்கட்டமாக ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள மதுபான சாலைகளை அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தவல் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் மதுபான சாலைகளின் தொகை அதிரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறு மதுபானசாலைகள் அதிகரித்துக் காணப்படுவதால் பல்வேறு பிரச்சினைகளும், பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றது. இவ்விடயங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரித்துக் காணப்படும் மதுபான சாலைகளை குறைப்பதற்கு மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே மதுபான சாலைகளுக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. இதன்படி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு வருகைதந்த மதுவரித்திணைக்கள உயர் அதிகாரிகள் குறித்த முறைப்பாடுகள் பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி சில மதுபான சாலைகளுக்கு எச்சரிக்கை கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டள்ளது. கோடுக்கப்பட்ட கால அவகாரத்திற்குள் அவர்கள் உரிய நடமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அவ்வாறான மதுபான சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்.

இதுதவிர ஆலயங்கள், பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அண்மையில் உள்ள மதுபான சாலைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நடவடிக்கையில் சில மதுபான சாலைகளை இவ்வாறான பொது இடங்களில் இருந்து அகற்றி வேறு பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இங்குள்ள மதுபான சாலைகள் குறைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. விசாரணைகளின் முடிவில் இவ்வாறன மதுபான சாலைகள் அனைத்தும் நிரந்தரமாக மூடுவதற்கும் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை கச்சேரி மற்றும் ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றிலிருந்து 50 மீற்றர் துாரத்துக்குள் ஒரு சாராயக்கடையும் 500 மீற்றர் விட்டத்தினுள் 2 சாராயக்கடையும் ஒரு கிலோ மீற்றர் துாரத்தினுள் ஒரு சாரயக்கடையும் உள்ளது. கச்சேரிக்கு மிக அருகில் ஏ9 வீதியில் உள்ள சாராயக்கடையில் கச்சேரியில் உள்ள சில அலுவலகப் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் நடைமுறைக்கணக்கில் சாராயம் வாங்கிக் கொண்டு செல்வதும் சம்பளம் வந்தவுடன் அந்தச் சம்பளக் காசை வங்கியில் எடுத்து இங்கே கட்டுவுதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அண்மையில் கச்சேரியில் வேலை செய்யும் சில ஊழியர்கள் குறித்த கடையில் பியர் வாங்கி கச்சேரிக்குள்ளேயே தாகசாந்தி நடாத்தியதாக கச்சேரி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அரசாங்க அதிபரின் இந்த செய்தியை பொதுமக்கள் சிலர் பகிடிச் செய்தியாக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.