விஜய் படத்தில் நடிக்கிறேனா? மியா ஜார்ஜ் விளக்கம்

விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் நடித்து வருகிறார்கள். இப்படத்தையடுத்து விஜய் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும், ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷும்  'இன்று நேற்று நாளை' நாயகி மியா ஜார்ஜும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியினை மியா ஜார்ஜ் தற்போது மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, 'விஜய் 60' படத்தில் நான் நடிக்கவுள்ளதாக என்னுடைய பெயரில் உள்ள பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் செய்தி வந்துள்ளது. ஆனால் அவை இரண்டுமே என்னுடைய அதிகாரபூர்வ பக்கங்கள் இல்லை. அவை போலியானவை. 'விஜய் 60' படத்தில் நடிப்பதற்காக இதுவரை என்னிடம் யாரும் அணுகவில்லை. எனவே அந்த செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்' என்று மியா ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார்.