சாராய ராசா தப்பிக்க பொலிசார் உதவினரா? பருத்தித்துறை நீதிபதிக்கு வந்த சந்தேகம்

மதுபோதையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பில், பருத்தித்துறை நீதிமன்றத்தில் நெல்லியடி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவ் வழக்குக்குரிய சந்தேகநபர் மற்றும் குறித்தநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பிணை முறி பத்திரம் இன்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், விளக்கம் கோரி காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

27532 வழக்கு இலக்கத்தை உடைய சந்தேகநபர், பொதுவிடத்தில் குடிபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளதாக கூறி நெல்லியடி பொலிஸாரினால் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவ் வழக்குக்குரிய சந்தேகநபர் மற்றும் குறித்தநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பிணை முறி பத்திரமோ இன்றி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் தப்பிக்க நெல்லியடி பொலிஸார் உடந்தையாக இருந்துள்ளனரா கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதிக்கு முன் விளக்கம் தரவேண்டும் என்றும் நீதிமன்றத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.