யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய அனைவருக்கும் பூரண சுதந்திரம் உண்டு! இராணுவப் பேச்சாளர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய அனைவருக்கும் பூரண சுதந்திரம் உண்டு என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக செனல்4 ஊடகம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது.,

வடக்கில் இராணுவ ஆட்சி நிலவி வருவதாகவும், சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தி வரும் சனல்-4 ஊடகம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அவ்வாறான நிலைமை இருக்கின்றதா என்பதனை கண்காணிக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். 

எவரும் வடக்கிற்கு செல்ல முடியும் சுதந்திரமாக ரயிலில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு பயணம் செய்கின்றனர். 

நயினாதீவிற்கு பயணம் செய்வது தொடர்பில் எவ்வித தடையும் கிடையாது. 

யார் எதனைச் சொன்னாலும், கேட்பவர்கள் சுய புத்தியுடன் கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.