யாழ்.நவாலி பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை - திணறும் போலீசார்

யாழ்.நவாலி பகுதியில் வீட்டை உடைத்து உட்புகுந்த திருடர்கள், அங்கிருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தியதுடன் 10 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் மற்றும் 3லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் நவாலி தெற்கு பகுதியை சேர்ந்த சம்போ ராஜேந்திரம் என்பவருடைய வீட்டுக்குள் இன்று புகுந்த கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

அதிகாலை வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டில் இருந்த 10 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் மற்றும் 3 லட்சம் பெறுமதியான பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை மேற்படி வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரம் கொள்ளையர்களுடன் தர்கத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது கொள்ளையர்கள் கட்டையால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.