ஜேர்மனி செல்ல முயற்சித்த பருத்தித்துறை நபர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

31 வயதான பருத்தித்துறையைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் சட்டவிரோதமாக ஜேர்மன் நாட்டை நோக்கி செல்ல முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சந்தேக நபரை இன்று நீ்ர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.