வடமராட்சியில் சவால் விடும் திருடர்கள்: திணறும் போலீசார்

வடமராட்சியில்  அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. திருடர்களின் சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

இரவு நேரத்தில் வீதிகளில் வெளிச்சம் கிராமங்களில் இல்லாமல் இருப்பதால் இருட்டை  சாதகமாக பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவது தொடர்கிறது. 

இந்த சின்ன திருட்டையே கட்டுப்படுத்த முடியாத போலீசாருக்கு வீடு புகுந்து திருடுவது வழிப்பறி செய்வது என தற்போது களம் இறங்கியுள்ள திருடர்களை பிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. 

துன்னாலை வடக்கு ஊர் எல்லை தெருவில் உள்ள வீட்டு அம்மன் ஆலய உரிமையாளனின் விட்டுக்குள் புகுந்த கரவெட்டி சீவல் தொழில் செய்யும் திருடர்கள் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருடி சென்றுள்ளனர். இதுவரை துப்புதுலங்கவில்லை. 

சில தினங்களுக்கு முன்பு  துன்னாலை வடக்கு ஊர் எல்லை தெருவில் உள்ள முன்னால்  பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டுக் காணிக்குள் 1 லட்சம் ரூபாய் பெறுமதியான 300 மீட்டர் நீளமான நீர் பாய்ச்சும் இறப்பர் குழாய் சுருளை நெல்லியடி பொலிசாரின் பிரதேசத்தில் வாழும் சீவல் தொழில் செய்யும் திருடர்கள் திருடி சென்றுள்னர்.

வடமராட்சியில் போலீசார் பற்றாக்குறை என்பதால் இரவு ரோந்து என்பது அவ்வப்போது மட்டுமே நடக்கிறது. குற்றப்பிரிவில் பிரிவு காலியாகவே உள்ளது. இதனால் போலீசார் திணறிவருகின்றனர்.