வடமராட்சியில் 5000 பாம்புகள், தினமும் 10க்கும் மேற்பட்ட பாம்பு அடிக்க வேண்டிய நிலையில்!

அண்மையில் யாழ்ப்பாணம் வடமராட்சி குடத்தனை கடற்கரையில் பாம்பு தீண்டிய ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். வடமராட்சியில் உள்ள ஒருவரின் வீட்டுக்  கோழிக் கூண்டுக்குள் வெள்ளை நிற நாக பாம்பு அகப்பட்டு இருந்தது. அண்மையில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாம்பு கடித்து துன்னாலையில் இறந்திருந்தார். 

வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு நேர்த்திகடனாக கொண்டு வந்து வடமராட்சியில் விடப்படும் பாம்புகள் வடமராட்சியை ஆக்கிரமித்துள்ளது. வடமராட்சியில் மட்டும் சுமார் 5 000 பாம்புகள்வரை நடமாடி வருவதாக தெரியவருகிறது. 

வடமராட்சி  பாம்புகள் படையெடுக்கும் தீவாகியுள்ளது -  தெருவில் விளையாட பயப்படும் குழந்தைகள் அதிகாரிகள் பொறுப்பு.

வடமராட்சி பகுதியில் உள்ள ஆட்கள் இல்லாத குடிமனைகள், பனங்காணிகள், திருத்தபடாத வீதிகள், குளம், கழிவு நீர் கால்வாய்களில் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, விஷ பூச்சிகள் வீட்டின் உள்ளே புகுந்து விடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

யாழ் குடாவின் புராதன தலைநகரம் எனவும் பாரம்பரிய அழகெனவும் வர்ணிக்கப்படும்  வல்லிபுரம் பகுதி பாம்புகள் இலங்கையில்  இருந்து இறக்குமதி  நடக்கும் இடமாக மாறி உள்ளது. 

தமிழரின் மூட நம்பிக்கை பல இளைஞர் யுவதிகளை பாம்பு கடிக்கு வடமராட்சியில் இரையாக்குகிறது. 

500இற்கும் மேற்பட்ட அனாதரவான வீடுகள் உள்ளன. 2000 இற்கும் மேற்பட்ட காணிகள் துப்பரவு  செய்யபடாமல் உள்ளன. 

வடமராட்சி பகுதிக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இதுவரை எவரும் TNA உட்பட நிறைவேற்றப்படவில்லை.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்டிய 5 கிலோ மீட்டர் சுற்று வட்ட பகுதி  தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு விஷப்பூச்சிகள் வடமராட்சி பகுதிகளில் வீட்டுக்குள் நுழைவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

தெருவிளக்கு பராமரிப்பு செய்கிறோம் என்ற பெயரில் கழட்டிச்செல்லப்பட்ட லைட்டுகள் இதுவரை மாட்டப்படாமல் உள்ளது. 

அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவேண்டும் என  மக்கள் பலமுறை அரசியல் வாதிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

வடமராட்சி எங்கும் மழைபெய்தால் கழிவுநீர் வீட்டின் உள்ளே வந்து விடுகிறது. அத்துடன் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு நேர்த்திகடனாக கொண்டு வந்து வடமராட்சியில் விடபடும் பாம்பு போன்றவையும் உள்ளே நுழைந்து விடுகிறது. 

கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. 

தூர்நாற்றம் அதிகம் உள்ளதால் வடமராட்சி பகுதியில் வீட்டின் உள்ளே இருக்க முடியவில்லை. 

வடமராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் கட்டிடங்களில் இருந்து இடிக்கும் பொருட்களை போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் கழிவுநீர் கால்வாய் அடைந்து கிடக்கிறது. இதனை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கை இதுவரை இல்லை. 

வடமராட்சி பகுதியில் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதேச சபை நகரசபை மாகாண சபை பாராளுமன்ற உறுப்பினர்களை அதன் பிறகு அவர் இப்பகுதியை கண்டுகொள்ளவேயில்லை. 

இதனால் வடமராட்சி  முழுவதும் புதர் மண்டி பாம்புகள் குடியிருக்கும் பகுதியாக மாறியுள்ளது. 

வீடுகளின் முன்பு தோண்டப்பட்டுள்ள குழி மற்றும் பற்றை காணிகளில் பாம்புகள் வந்து படுத்துக்கொள்கின்றன. 

வடமராட்சியில் தினமும் 10க்கும் மேற்பட்ட பாம்பு அடிக்க வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் குழந்தைகள் விளையாட வெளியே செல்லப் பயப்படுகின்றனர். பெண்கள் தண்ணீர் எடுக்கவும் பயப்படுகின்றனர். 

இதுகுறித்து அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.