நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எட்டி உதைத்த சுரேஸ்

‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணியை பலப்படுத்தும் நோக்கத்தில் பேரணியில் கலந்துகொள்ளவிருக்கும் பொதுமக்களுக்கான பிரயாண ஒழுங்குகள் உள்ளிட்ட இதர நிதித்தேவைகளுக்கு பங்களிப்பு வழங்கும் நோக்கத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் இணையவழி சந்திப்புக்கு விடுத்த அழைப்பை சுரேஸ் எட்டி உதைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த 24.09.2016 அன்று யாழ். முற்றவெளியில் இடம்பெற்ற குறித்த பேரணிக்கு முன்னரான நாட்களில் 'ஐநூறு பேர் வருவார்களா? ஆயிரம் பேர் வருவார்களா?' என்ற பதட்டத்திலும் குழப்பத்திலும் இருந்த சுரேஸ், இறுதிக்கட்டத்தில் பலதரப்பட்ட சிவில் சமுக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்த பின்னரே அமைதி நிலைமைக்கு திரும்பியிருந்ததாகவும் அறிய முடிகின்றது.

தமிழர் தாயகத்தின் முன்னணி சிவில் சமுக மனித உரிமை செயற்பாட்டு அமைப்பு ஒன்றின் ஊடாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுரேஸ் பிறேமச்சந்திரனை இணையவழி சந்திப்புக்கு அழைத்திருந்திருந்த நிலையில், ‘நான் ஏன் அவர்களை சந்திக்க வேண்டும்’ என்று சுரேஸ் எதிர்கேள்வி கேட்டு அசால்ட்டாக தட்டிக்கழித்ததாக அந்த அமைப்பினர் கவலை தெரிவித்தனர்.

‘இனி என்ன மக்கள் எங்கட பக்கம் தான். மக்கள் எங்களுக்கு ஆணை தந்து விட்டனர். மறுபடியும் அரசியல் அதிகாரத்தை பிடித்துவிடுவேன்’ என்ற ஆணவச்செருக்கிலும், நமட்டுத் துணிச்சலிலும் சுரேஸ் இப்படி நடந்துகொண்டதாகவும், அவரது வழமையான பாணியே இது தான் என்றும் புத்திஜீவிகள் கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.

தகவல்: சிவி