தியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் உளறிய சரா எம்.பி (Video)

தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்றுத் திங்கட்கிழமை(26) காலை-10 மணியளவில் யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியின் முன்பாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

இந்த நினைவு நிகழ்வு முடிவுறும் வேளை அவ்விடத்திற்கு வருகை தந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அங்கு பேசிய விடயத்தை, பேசியது என்பதை விடவும் உளறிய விடயத்தை அப்படியே மாற்றங்கள் ஏதுமில்லாமல் உங்கள் பார்வைக்குத் தந்துள்ளோம்.

அன்று ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட்ட போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் நல்லூர் ஆலயத்தின் வடக்கு வீதியில் நானும் நின்றேன் . இங்கு தானிருந்தேன். ஆனால், ஓரளவுக்கு அனறைய நிலை இரண்டாவது, மூன்றாவது நாள்  எங்களுக்குத் தெரியவந்தது. டிக்சித் அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் எதையும் தலை சாய்க்க மாட்டார். அவர் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து நேரடியாக வேலை செய்து கொண்டிருந்தவர். அவர்களால் காந்திய வழியில் எடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் அவர்களாலேயே மழுங்கடிக்கப்பட்டது.

அன்று எத்தனையோ கேள்விகளைக் கேட்டோம். காந்தீய வழியில் இதோ இப்படி நடந்து கொண்டிருக்கிறது. ஏதாவது, உங்களுடைய மறுமொழிகள் கொடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தோம். கடைசி நிமிடத்தில் கூட அவரை அணுகிய போதும் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டில் எங்களைத் தவிர்க்க விட்டார்கள். இந்தவிடத்தில் முழு இந்தியாவையுமே நாங்கள் குற்றம் சொல்லியேயாக வேண்டும். 

இன்று கூட நான் சொல்லவில்லை முழுக்க முழுக்க இந்தியா உதவி செய்யும் என நான் சொல்ல வரவில்லை.  ஆனால், நாங்கள் முழுக்க முழுக்க நம்பியிருந்தது அன்றிலிருந்து இன்றுவரை நம்பிக் கொண்டு தானிருக்கிறோம். 35 வருடங்களுக்கும் மேலாகவும் இந்தப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும் இன்றும் நாங்கள் நம்பிக் கொண்டு தானிருக்கிறோம். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதாவது ஜனநாயக வழியில் நடந்த போராட்டத்தைப் பாருங்கள்....இந்தவிடத்திலிருக்கும் தூபியை...போராட்டத்தின் மூலம் அவரது மறைவுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட இந்தத் தூபியைக் கூட இலங்கை அரசாங்கம் அப்படியே இதை உடைத்து விட்டது. அங்கிருந்த இராணுவத்தால் உடைக்கப்பட்டது. மீண்டும், ஆனால், எங்களுக்கொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது இந்தவிடத்தில் நாங்கள் அஞ்சலி செலுத்துவதற்கு. இதுவொரு தொடக்கமாக வைத்து நான் நினைக்கின்றேன் முடிந்த மட்டில் ஜனநாயக ரீதியில் அடையலாமா? என்பதை நாங்கள் தற்போதைய இராஜதந்திரப் போராட்டத்தின் மூலம் எடுத்துப் பார்ப்போம். 

எவ்வளவு தூரம் இது சாத்தியமாகும் என்பதில் அம்மிச்சமிருக்கிறது. சாத்தியப்பட்டால் அது வெற்றி. ஆனால், அதைக் கேள்விக் குறியென்றும் சொல்ல முடியாமலிருக்கிறது. சாத்தியப்படும் என்றும் சொல்ல முடியாமலிருக்கிறது. ஏனெனில், அங்கு..அது.. பெரும்பான்மையினம் உலகநாடுகளைப் பார்க்காமல் தமிழர்கள் ஏதோ தங்கள் விரோதிகள் என்ற மனப்பான்மையை விட்டு அவர்கள் போகவில்லை. 

நாங்கள் தான் அவர்களுடன் நல்லிணக்கத்திற்குரிய செயற்பாடுகளைக் காட்டுகின்றோமே ஒழிய  அவர்களால் முழுமையாக இங்கு ஒன்றும் காட்டப்படவில்லை. எனவே, நாங்கள் எல்லாம் பொறுத்திருந்து, ஆறுதலாக, அமைதியாகக் கொஞ்சக் காலத்தைக் கொடுத்து விட்டு  அதன் பிறகு அடுத்த கட்டம் என்ன செய்யலாம்? என்பது தான் இப்போதைக்குப் புத்திசாலித்தனமான நடவடிக்கை. இதை நாங்கள் அன்று போராட்டத்தின் இடைநடுவில் நடந்த இந்த ஜனநாயகத் திலீபன் அவர்களின் உண்ணாவிரதத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு நாங்கள் கொஞ்சக் காலம் பொறுமையாகவிருப்பது நல்லம் என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

இருந்தாலும், நாங்கள் சமூகத்துடன் ஒன்று சேர்ந்து என்னத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அதைத் தான் செய்ய வேண்டிய கடமையுமிருக்கிறது எனக் கூறி நாங்கள் இப்போதைக்கு நல்லது நடக்கும்..நல்லதையே எண்ணுவோம் என்று சொல்லிக் கொள்கின்றேன்.

இது தான் கூட்டமைப்பின் சரவணபவன் எம்.பி நல்லூரில் திலீபனின்  நினைவு நாள் நிகழ்வில் பேசியவை. இந்தப் பேச்சில் உங்களில் யாருக்காவது ஒரு தெளிவிருக்கிறதா?, ஒரு அரசியல்வாதி இப்படியா பேசுவது? இவர்களையெல்லாம் யாருடா அரசியலுக்குள் கொண்டு வந்தது?