யாழ். ஊரெழு வெள்ளைக்கு ‘உதைபந்தாட்ட வித்தகர்’ விருது…!!

யாழ்ப்பாணம் – ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகியும் பிரபல உதைபந்தாட்ட வீரருமாகிய வெள்ளை என அழைக்கப்படும் வைரமுத்து தர்மகுலநாதனுக்கு ‘உதைபந்தாட்ட வித்தகர்’ எனும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் நடத்திய உதைபந்தாட்ட இறுதியாட்டம் அண்மையில் இடம்பெற்ற போது இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

50 வயதினைத் தாண்டியும் தனது மூன்று மகன்மாருடன் மைதானத்தில் தொடர்ந்து ஆடிவருவதுடன் உதைபந்தாட்டத்துக்கு நீண்டகால பெருமையையும் தேடிக் கொடுத்துள்ளமையால் இவ்விருதினைப் பெற்றுள்ளார்.

குறித்த விருதினை வடமாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியபாலன் வழங்கி வைத்தார்.