சாவக்கச்சேரியில் நாயை குளிப்பாட்ட சென்ற நபர் நீரில் மூழ்கி பலி

சாவக்கச்சேரி பகுதியில் தனது நாயை குளிப்பாட்ட சென்ற நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

52 வயதுடைய நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த செல்லையா கனகானந்தன் நபரே உயிரிழந்துள்ளதாகவும் சாவக்கச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.