பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதானோருக்கு புனர்வாழ்வு!- அரசு தீர்மானம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலருக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 96 சந்தேக நபர்களில் 23 பேருக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சந்கேத நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை திருத்தி அமைப்பது குறித்து புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆறு மாத கால புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சந்தேக நபர்கள் விரும்பினால், புனர்வாழ்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.