சகோதரருடன் லிப் டூ லிப்: பிஞ்சிலேயே பழுத்த நடிகை

கணவர் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் தனிப்பட்ட வாழ்க்கை பலரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி 2005ம் ஆண்டு வெளியான மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படத்தில் நடித்தபோது ஏற்கனவே திருமணமான நடிகர் பிராட் பிட்டுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டார். இதையடுத்து பிட் தனது மனைவியும், நடிகையுமான ஜெனிபர் ஆனிஸ்டனை பிரிந்து ஜூலியுடம் வசித்தார்.

பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த பிட், ஜூலி கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தனர். இந்நிலையில் ஜூலி தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிவித்த விபரங்கள் பலரை அதிர வைத்தன.

கிஸ்ஸி கேர்ள்ஸ்

நான் பள்ளியில் அதுவும் கே.ஜி. வகுப்பில் படித்தபோது கிஸ்ஸி கேர்ள்ஸ் என்ற குழுவில் இருந்தேன். பள்ளியில் படிக்கும்போது நானும் பையன்களும் உடைகளை அவிழ்த்துவிட்டு முத்தம் கொடுப்போம், ஏதேதோ செய்து சிக்கலில் மாட்டியுள்ளோம் என்று ஜூலி பத்திரிகை ஒன்றுக்கு கடந்த 2007ம் ஆண்டு தெரிவித்தார்.

கன்னித்தன்மை

நான் 14 வயதில் தாயின் ஆசியுடன் கன்னித்தன்மையை இழந்தேன். எனக்கு செக்ஸ் மட்டும் போதவில்லை. அதனால் கத்தியால் குத்திக் குத்தி விளையாடுவதில் மகிழ்ச்சி கண்டேன். நான் என் காதலரை குத்துவேன் அவர் பதிலுக்கு என்னை குத்துவார். இருவரும் ரத்தம் வழிய நிற்போம். அதில் ஒரு த்ரில் இருந்தது என ஜூலி கடந்த 2003ம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

போதை

நான் 20 வயதிற்குள் உலகில் உள்ள அனைத்து போதை வஸ்துகளையும் சுவைத்துவிட்டேன். அதில் எனக்கு பிடித்தது ஹெராயின். என் முதல் கணவர் ஜானி லீ மில்லர் தான் நான் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளியே வர உதவினார் என்றார் ஜூலி.

லெஸ்பியன்

1996ம் ஆண்டு ஃபாக்ஸ்ஃபயர் படத்தில் நடிக்கும்போது ஜென்னி ஷிமிசு என்ற நடிகையுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் ஜூலி. ஷிமிசுவை திருமணம் செய்யும் எண்ணம் இருந்ததாக ஜூலி கூறினார்.

சகோதரர்

ஏஞ்சலினா ஜூலி 2000ம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழா மேடைக்கு பின் தனது சகோதரர் ஹேவனுக்கு லிப் டூ லிப் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். மேலும் 3 மாதங்கள் கழித்து நடந்த ஆஸ்கர் விருது விழாவிலும் சகோதரருக்கு லிப் டூ லிப் கொடுத்தார்.

பிராட் பிட்

பிராட் பிட்டுடன் தனக்கு கள்ளத்தொடர்பு இல்லை என்றும், தனது தந்தை தன் தாயை ஏமாற்றியதால் தான் திருமணமான எந்த ஆணுடனும் உறவு கொள்ள மாட்டேன் என்றும் ஜூலி தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு அவர் பிட்டுடனான உறவை ஒப்புக் கொண்டார்.