இலங்கையின் வடக்கில் புத்தரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து சென்னையில் உண்ணாவிரதம்

தமிழ்நாட்டை தளமாகக் கொண்டியங்கும் இந்து மக்கள் கட்சியின்  மாநிலச் செயலாளர் இராம. இரவிக்குமார் கடந்த 26.08.2016 தொடக்கம் 31.08.2016 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். 

அவரும் மறவன்புலவு சச்சிதானந்தன்  அவர்களும் மாதம்பை, புத்தளம், முருங்கன், திருக்கேதீச்சரம், கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், கொக்கிளாய் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். 

தமிழர் பகுதிகளில் எவ்வாறு புத்தர் ஊடுருவி உள்ளார் ஏன்பதனை நேரில் பார்த்தனர். 

இதன் எதிரொலியாக இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்க  வரும் 23.09.2016 வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் இராம. இரவிக்குமார் தலைமையில் உண்ணா நோன்பு போராட்டம் இடம்பெறவுள்ளது. 

இதில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.