​வடமராட்சி கடலோடி தொடர்பில் வெளியான செய்திக்கு டெனிஸ்வரன் பதில் (Video)

கடந்த 16 ஆம் திகதி "மீன்பிடி வலை கேட்ட கடலோடியிடம் மாவீரரின் மரணச் சான்றிதழ் கேட்ட டெனிஸ்வரன்" என்கிற தலைப்பிலான செய்தியொன்று எமது நியூஜப்னா இணையத்தளத்தில் வெளியாகி இருந்தது. 

கடலோடியான கா. அண்ணாமலை அவர்கள் தனக்கு நேர்ந்த அவலங்களை அதில் பதிவு செய்திருந்தார். 

குறித்த செய்தி தொடர்பில் வடக்கு மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் தனது மறுப்பை அறிக்கையாகவும், வீடியோ வடிவிலும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அந்த வீடியோவை கீழே வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு தருகின்றோம், 

குறித்த அறிக்கையில் டெனிஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், 

ஒரு செய்தி வருகின்றபோது அதன் உண்மைத்தன்மையை சரியாக ஆராய்ந்து அதன்பின்னரே அதனை மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

அண்மையில் தங்களை யாரென்று சரியாக இனம்காட்டமுடியாத முகவரியில்லா இணையத்தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது., ஒரு மாவீரர் குடும்பத்திடம் அதற்கான மரணச்சான்றிதழை நீரியல் வளத்திணைக்களத்திடம் இருந்து பெற்று வாருங்கள் உங்களுக்கு ரூபா 50,000/- தருவதாக நான் கூறியதாக அச்செய்தி அமைந்திருந்தது. 

இது தொடர்பில் எனது கண்டனத்தை பதிவு செய்வதோடு, முகவரியில்லா இணையத்தளங்களுக்கும் அதற்குப்பின்னால் இருக்கும் அற்பத்தனமான அரசியல்வாதிகளுக்கும் எனது செய்தியை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்... என்று குறித்த செய்தி தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

குறித்த செய்தி வருமாறு, 

மீன்பிடி வலை கேட்ட கடலோடியிடம் மாவீரரின் மரணச் சான்றிதழ் கேட்ட டெனிஸ்வரன் (Video)