15 வயதுச் சிறுமியை கர்ப்பிணியாக்கியவர் கைது

15 வயது பாடசாலை சிறுமியுடன் 7 மாதங்களாக சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 20வயது இளைஞர் சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி மஸ்கெலிய- சாமிமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், தற்காலிகமாகஇவர் கஞ்சிக்குழி பிரதேசத்தில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைத்ததகவலுக்கமைய ஒரே வீட்டில் வசித்து வந்த குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாகதெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபருடன், இந்த சிறுமி காதல் தொடர்பு கொண்டிருந்ததாகவும், கடந்தபெப்ரவரி மாதம் முதல் சந்தேகநபருடன் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது குறித்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணி என்றும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மருத்துவ பரிசோதனைகளுக்காக சிறுமி சிலாபம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இளைஞர் சிலாபம் நீதவான் நீதிமன்றில்ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.