நாய்க்கு ஐ.போன்களை பரிசாக அள்ளி வழங்கிய கோடீஸ்வரர் மகன் (Photos)

சாதாரண நாய்க்கு கிடைத்துள்ள சொகுசு வாழ்க்கை மிகவும் கஸ்டப்பட்டு, பல தியாகங்களை செய்து பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து கோடீஸ்வரர் நிலையை எட்டும் தனவந்தர்களின் பிள்ளைகளுக்கு பணத்தின் பெறுமதி புரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதனை சான்று பகிரும் வகையில் சீனாவின் முதற்தர கோடீஸ்வரரும், உலகின் 18வதுநிலையிலுள்ள கோடீஸ்வரருமான வேங் ஜெயின்லினின்(Wang Jianlin) மகனான வேங் சிகொங்Wang Sicong தனது செல்லப்பிராணியான நாய்க்கு பரிசளித்துள்ளவற்றைப் பார்த்தால் வியப்பின் உச்சிக்கே சென்று விடலாம்.

தனது செல்லப்பிராணிக்கு iPhone 7 வர்க்கத்திலான 8 கைத்தொலைபேசிகளை பரிசளித்துள்ளார்.

குறித்த கைத்தொலைபேசி ஒன்றின் விலை 800 ஸ்ரேலிங் பவுன்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.