இவர் தானம்மா வடக்கு கல்வி அமைச்சர் (Video)

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின்  பழைய அதிபரே தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கைப் போராட்டம்  கடந்த வாரம் உச்சத்தை தொட்டிருந்தது. 

பாடசாலையின் நுழைவாயிலை இழுத்துப் பூட்டி மாணவிகள் அந்த நேரம் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தார்கள். 

அந்த நேரம் போராட்ட களத்துக்கு வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு மூத்தவர் வந்திறங்கினார்.

அப்போது கூடவே இருந்த மற்றுமொருவர்  மாணவிகளிடம், இவர் தானம்மா கல்வியமைச்சர் என்று அறிமுகப்படுத்தினார்.

இந்த சம்பவம் ஒன்றே போதுமானது, வடக்கு கல்வியமைச்சரான குருகுலராஜா வடக்கு மாகாண கல்விச் சமூகத்தினரிடையே எவ்வளவு பிரபலமாக இருக்கிறார்? என்பதனை உணர்ந்து கொள்வதற்கு.

இனியாவது ஏசி கார்களிலும்  ஏசி ரூம்களிலும் இருக்காமல் பாடசாலைகள் தோறும் சென்று அங்கிருக்கும் பௌதீக வளப்பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகளை பூர்த்தி செய்து வைப்பாரா குருகுலராஜா?