மஹிந்தவின் முடிவை அறிந்த பின்புதான் ரெலோ ‘எழுக தமிழ்’ நிகழ்ச்சியில் பங்குபற்றுமாம் - வினோ

மஹிந்த ராஜபக்ஸவின் முடிவை முழுமையாக அறிந்து தெரிந்துகொண்ட பின்னரே, யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் எதிர்வரும் 24.09.2016 சனிக்கிழமை அன்று இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணியில் ரெலோ கலந்துகொள்ளும் என்று அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

‘எழுக தமிழ்’ பேரணிக்கு மக்களை ஒன்று கூட்டும் நோக்கத்தில் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று கடந்த சனிக்கிழமை மாலை வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரெலோவின்  வினோ, மஹிந்த ராஜபக்ஸவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளாமல் எழுக தமிழ், பொங்கு தமிழ் என்று செய்தால் தென்னிலங்கையில் அது சிங்கள மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். 

எனவே எமது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பில் சந்தித்து பேச உள்ளார். பேசிய பின்னர் ரெலோ கட்சி எழுக தமிழ் பேரணியில் கலந்துகொள்ளுமா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிக்கும் என்று தெரிவித்தார்.