எந்தவொரு யுத்த இரகசியத்தையும் வெளியிடவில்லை என்கிறார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ண

'என்னால்எழுதப்பட்ட 'ரணமக ஒஸ்சே நந்திக்கடல்' (இராணுவப் பாதையில் நந்திக்கடல்) என்ற புத்தகத்தில் எந்தவொரு யுத்த இரகசியத்தையும் வெளியிடவில்லை" என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ண தெரிவித்துள்ளார். 

ஏதாவது இரகசியம் இருந்தால் தான் மரணமடைந்த பின்னர், அவை அனைத்தும் தன்னுடன் மண்ணோடு மண்ணாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.