துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு,  நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மாத்தறை மாவட்டம்,  வில்கடுவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.ஏ.ஏக்கநாயக்க (வயது 30) என்று அழைக்கப்படும் இராணுவ வீரரே தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறித்த இராணுவ முகாமின் இராணுவத்தினரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு இராணுவத்தினர் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.