காட்டிக் கொடுப்பில் ஈடுபட்ட யாழ். வடிவேலு!- காறித் துப்பிய பாதுகாப்புப் படை

பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த வேளை யாழ். வடிவேலு போட்ட வெடிகுண்டு புஷ்வாணமாகிப் போனது. 

பிரதமரை வரவேற்க சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன,    சர்வா சர்வானந்தன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் அங்கே திரண்டிருந்தனர். 

அங்கே மைதானத்துக்கு வெளியே நின்றிருந்த வடிவேலு சர்வா பிஸ்டல் வைத்திருப்பதாக MSD ஐச் சேர்ந்த ஒருவரிடம் சொல்ல அவர்கள் அவரது குரலை கிஞ்சித்தேனும் மதிக்கவில்லை. 

அதன் பிற்பாடு அங்கே நின்றிருந்த பொலிஸ் SSP இடம் சர்வா சக்கை வைத்திருப்பதாக கதை விட்டுள்ளார். 

அவரும் இதனைக் கேட்டு விட்டு யாழ். வடிவேலுவை அங்கொடை விசர் ஆஸ்பத்திரிக்கு தான் அனுப்ப வேண்டும் என அருகில் நின்றவரிடம் முணுமுணுத்துள்ளார். 

யாழ். வடிவேலு ஏற்கனவே ஜனாதிபதியை கொல்ல யாழில் சதித் திட்டம் என்று புரளியைக் கிளப்பி கொழும்பு நாலாம் மாடியில் வாங்கிக் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.