யாழ் - கொழும்பு பேரூந்து சேவையில் நடக்கும் தில்லாலங்கடிகள்!! பயணிகளின் நிலை அரோகரா

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குச் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் பல பேரூந்துகள் அரச அனுமதிப்பத்திரம் இல்லாது  சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. 

இந்தச் செயற்பாடு பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. கொழும்பு யாழ்ப்பாண வழித்தடத்தில் மொத்தமாக 35 பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டுவருகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 15 பேரூந்துகள் அரச அனுமதிப்பத்திரம் பெறாது சேவையில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றன.

இவ்வாறு அனுமதிப்பத்திரம் இல்லாது சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் ஏறிப் பயணம் செய்யும் பயணிகள் பெரும் துண்பத்தை அனுபவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்வதற்குள் பொலிசாருக்கு பயந்து உள்ள காடு மேடெல்லாம் களவாய் பயணித்தே குறித்த பேரூந்துகள் கொழும்பு - யாழ் சேவையில் ஈடுபடுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து நாவற்குழி -  தனங்கிளப்பு - சங்குப்பிட்டி பாதையால்  பூநகரி சென்று அங்கிருந்து பயங்கரக் காட்டுப் பாதை வழியாக செட்டிகுளம் ஒயாமடுவவ என என அனைத்து வழியாகவும் பேரூந்துகளைச் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அரச அனுமதி இல்லாது சேவையில் ஈடுபடும் பேரூந்துளைப் பொலிசார் துரத்தித் துரத்திப் பிடித்தாலும் அவர்களுக்கும் டிமிக்க விட்டு பயணிகளையும் படாத பாடுபடுத்தி சேவையிலீடுபடுகின்றனர். குறித்த பேரூந்துகள் களவாக செல்லும் போது குறித்த பேரூந்துகளுக்கு பாதுகாப்பாகவும் பொலிசாரைக் கண்காணித்து அவர்களிடம் பிடிபடாமலும் இருப்பதற்காக பலர் பேரூந்துச் சாரதியுடன் தொடர்பில் இருந்து தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கவே பேரூந்து பாதையில் பயணிக்கும்.

இவ்வாறான நடவடிக்கைகள் அனுமதி பெறாத பேரூந்துகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த கள்ளச் சேவையில் ஈடுபடுபவர்களில்  பீ.கே.ரவல்ஸ் உரிமையாளராக உள்ள பிரதாப் என்பவர் மிக முக்கிய இடத்தில் உள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பதும் மட்க்களப்பு. பிறின்ஸ் ரவல்ஸ்சின்  முகாமையாளராக இருந்து  பிறின்ஸ் உரிமையாளர் வெளிநாடு சென்ற வேளை அவரின் பெருமளவு பணத்தினை சூறையாடி அனுமதிபத்திரம் இல்லாமல் 2 பஸ்களை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இவன் யாழ்ப்பாணம் கொழும்பு செல்லும் தனது பஸ்களில் பிரயாணம் செய்யும் பெண்களில் தனியாகப் பிரயாணம் செய்யும் பெண்களை தனது வலையில் வீழ்த்தி பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போலவே அனுமதிப்பத்திரம் இல்லாமல் கீழே காணப்படும் இலக்கங்கள் உள்ள பஸ்கள் கொழும்பு யாழ் சேவையில் ஈடுபட்டு பயணிகளுக்கு பெரும் தொல்லைகளைக் கொடுத்து வருவதாக தெரியவருகின்றது.

NA8697. ND8535. ND8105. ND7043. ND9995.  ND9999. ND0140. NA7827. 62-5236. NA7824

 பஸ்களை நடுக்காட்டுக்குள் நிறுத்தி விட்டு பயணிகளை மிகவும் தொல்லைக்கு உள்ளாக்குவதும் மேலே குறிப்பிடப்பட்டு்ளள இலக்கங்களை உடைய பேரூந்துகளே ஆகும்

பேலியகொடையில் இருந்து கொழும்பு வரையுள்ள பாதையில் ஒரு பயங்கர சண்டைக்குச் செல்லும் போராளிகளைப் போல் ஆயத்தத்துடன் பலரை மோட்டார் சைக்கிளில் அனுப்பி  பொலிசார் வீதிச் சோதனையில் ஈடுபடுவதை கண்கானித்து பொலிசார் வீதிகளில் நின்றால் பஸ்சிற்கு தொலைபேசி மூலம் தகவல்கள் கொடுத்தே கொழும்பைச் சென்றடைகின்றது பேரூந்து. முன்னார் விடுதலைப் புலிகள் இவ்வாறே கொழும்பிற்கு ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டுநாயக்கா விமானநிலையம் மீதான தாக்குதல்களும் இவ்வாறே இடம்பெற்றுள்ளன. 

ஒரு 20 ஆயிரம் ரூபா இலாபம் வரும் இந்த பஸ் பிரயாணத்திற்கே இவ்வளவு ‘றிஸ்க்‘ எடுப்பவர்கள் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் கொடுக்கும் பல லட்சக்கணக்கான பணத்திற்கா என்னவெல்லாம் திட்டம் போடுவார்கள் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

இவ்வாறான பஸ்களை பிடிப்பதற்காக விசேடமாக கொழும்பில் இருந்து வந்து செயற்படும் பொலிசார் பஸ்களைப் பிடித்து அவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த போதும் அவர்குள் பணத்தைக் கட்டி வெளியே வந்து விட்டு மீண்டும் தமது செயற்பாட்டை செய்து வருகின்றனர்.

இதனால் பொலிசார் மேற்கொள்ளும் மிகவும் சிறப்பான செயற்பாடுகளும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.

.