தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை!- யாழில் பிரதமர்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவேகாணாமல்போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் பழிவாங்கும்எண்ணம் இல்லை. இது காயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சியே ஆகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிட தொகுதி திறப்பு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறுகூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காணாமல்போனவர்கள் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக காணாமல்போனவர்கள்அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்கள் இருக்கிறார்களா? இல்லையா?என காண்பதற்கே இந்த அலுவலகம். இதற்கு ஒரு கால எல்லை இல்லை. என்பதுடன்பழிவாங்கும் எண்ணமும் இல்லை. இது மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கானமுயற்சியே ஆகும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிறந்த நாள் இன்றாகும்.அவர் பெரும் போராட்டத்தின் மத்தியில் 13ம் திருத்த சட்டத்தை கொண்டு வந்தார். அதற்கு எதிராக தெற்கிலும்,வடக்கிலும் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவரை கொல்வோம். என்றார்கள்.

ஆனால் அவரையும், அவர் உருவாக்கிய 13ம் திருத்த சட்டத்தையும் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அது அரசியல் தீர்வின் அடிப்படையானது.

போர் நிறைவடைந்த பின்னர்13ம் திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக அமையும் என நாங்கள்நம்பினோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் என்றார்.ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் பலபிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்த நிலையிலேயே ஐ.தே.கட்சியும்சிறீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம்.

இப்போது சிலர் பௌத்தம், தேசிய கொடி, தேசிய கீதம் பாதுகாக்கப்படவேண்டும்.என்கிறார்கள். பௌத்த சமயம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி இனவாதம் பேசுகிறார்கள்.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது தலதாமாளிகையில் பௌத்த பிக்குகள் போராட்டம் ஒன்றை நடத்த இருந்தனர். அப்போது அங்கேசென்று அவர்களை அச்சுறுத்தி புதிய பீடம் ஒன்றை உருவாக்குவோம். என கூறியவர்கள்இப்போது கூச்சலிடுகிறார்கள்.

இவ்வாறானவர்களிடமிருந்து மல்வத்த பீடத்தை பாதுகாக்கும் சரத்துக்கள் புதியஅரசியலமைப்பில் உருவாக்கப்பட வேண்டும். நாம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, வழிகாட்டல் குழு, மற்றும் 6உப குழுக்கள் ஆகியவற்றை உருவாக்கி அதன் ஊடாக பெரும்பான்மையின மக்களிடம் மட்டுமல்லாமல், சகலமக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்றிருக்கின்றோம்.

இதன் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தேர்தல்முறைமை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசி வருகின்றோம். குறிப்பாகதேர்தல் மறுசீரமைப்பு விடயத்தில் 80 வீதமான முன்னேற்றம்காணப்பட்டிருக்கின்றது.

இதேபோல் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிமுறைமை ஒழிப்பு தொடர்பாகவும் நாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் அதிகார பகிர்வு விடயத்தில் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கும்,நகரசபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் வரையில் அதிகாரங்கள்பகிரப்பட்டிருக்கும் வகையில் ஒரு அதிகார பகிர்வை குறித்துப் பேசி வருகின்றோம்.

இதேபோல் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வாக்கெடுப்பு பொதுசன வாக்கெடுப்பாகஅமையும். மேலும் 9 மாகாணங்களுக்கு ம் செனற்சபை ஒன்றும் உருவாக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் பேசிவருகிறோம்.

மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாகஆலோசனைகள் பெறப்படுகின்றது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிறைவுசெய்யப்படும். சில அதிகாரங்கள் பகிரப்பட்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்தினால்மீள பெறப்படும். என அச்சமும் உள்ளது.

எனவே அவை தொடர்பாகவும் நாங்கள் சரியான முறையில் பேசியிருக்கின்றோம். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நல்லிணக்க பொறிமுறைகளுக்கானசெயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நல்லிணக்க ஆணைக்குழுஉருவாக்கப்பட்டுள்ளது. 30 வருடங்கள் இந்த நாட்டில் போர் நடைபெறாமல்இருந்திருந்தால் இந்த நாடு முன்னேற்றம் கண்டிருக்கும்.

இனவாதத்தினால்நன்மைகளே இல்லை.இனவாதத்தை அழிப்போம்.

சிங்கள கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட பலகலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வளர்ந்தது.

அதேபோல் தமிழ் கலாச்சாரமும்சிங்கள கலாச்சாரம் உள்ளிட்ட பல கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு வளர்ந்தது.

இங்கே நாங்கள் அனைவரும் ஒரு உறவுக்காரர்கள், ஒரே அணியினர்.

எனவே நாங்கள்அனைவரும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற வேண்டும். என கூறினார்.