புதிய கட்சிஆரம்பிக்கிறார் கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஒரு புதிய கட்சி அமைக்க தயாராகி வருவதாக கூறியுள்ளார். 

அத்துடன் அவருடைய புதிய கட்சியில் கிழக்கில் உள்ள உயர்கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை இணைத்துக் கொள்வதை கருணா அம்மான் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி தேர்தலின் போது தனது புதிய கட்சி இடம்பிடிக்கும் என தான் எதிர்பார்ப்பதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்த போது கருணா மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.