தியாகதீபம் திலீபனின் நினைவுநாள் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

தியாகதீபம்  திலீபனின் நினைவுநாள் நிகழ்வு நாளை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. 

தமிழர் விடுதலை கூட்டணியும், ஜனநாயக போராளிகள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், பிரதேச மக்கள், ஆகியோரை கலந்து கொள்ளுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.