தியாக தீபம் திலீபனுக்கு முஸ்லிம் சகோதரர்கள் அஞ்சலி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவேந்தல் நாளின் மூன்றாம் நாளான இன்று சனிக்கிழமை அவரது நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்த நல்லுர் அமைவிடத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியினருடன் முஸ்லிம் சகோதரர்களும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  

1987ம் ஆண்டு இந்தீய அரசாங்கத்தின் ஈழ ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அன்றைய யாழ்.மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் திலீபன் அவர்கள், நல்லுர் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஒரு சொட்டு உணவுப்பருக்கையோ, நீரோ உட்கொள்ளாமல் 12 நாட்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து போது இந்த முஸ்லிம் சகோதரர்களும் அன்று தாம் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றிருந்ததை இன்றைய நாளில் நினைவுகூர்ந்தனர்.