தூய்மையாக்கப்படும் யாழ் கோட்டை பிரதேசம்

யாழ்ப்பாணம் - கோட் டையை சூழவுள்ள பகுதிகளைத் துப்பரவாக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது. 

குறித்த பிரதேசத்தில் வளர்ந்துள்ள பற்றைகள், செடிகள் என்பன வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. 

கோட்டையைச் சுற்றிய அகழியை அண்டிய பிரதேசங்களும் துப்பரவாக்கப்பட்டு வருகின்றது. 

முனீஸ்வரன் கோவிலடி, முற்றவெளி சுற்றாடல் பிரதேசம் என்பனவும் துப்பரவாக்கப்பட்டு வருகின்றன.