ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டரை வீடியோ எடுத்தவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த ஹெலிகொப்டர்  பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில், நேற்று வெள்ளிக்கிழமை தரையிறங்கிய போதே, இளைஞன் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

வெள்ளவத்தையில் தங்கியிருந்து தொழில் புரியும் 26 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.