நாவல் பழம் பறிக்க மரத்தில் ஏறிய சிறுவன் கிளை முறிந்து வீழ்ந்து படுகாயம்!- யாழில் சம்பவம்

தற்போது நாவல் பழ சீசன் ஆகையால், மரத்தில் நாவல் பழம் பறிக்க ஏறிய சிறுவன் கிளை முறிந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

நேற்றுக் காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சிவதாசன் சாரங்கன் என்ற 16 வயதுச் சிறுவனே படுகாயமடைந்தவராவார்.