கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் ஆர்பிஜி ஷெல்கள் மீட்பு

கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,

நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ரக ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இன்றையதினம் காலையே குறித்த காணியினுள் வேலை செய்கின்ற ஒப்பந்தக்காரரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட தகவலை அடுத்து,

சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், மீட்கப்பட்ட ஒன்பது ஆர்பிஜி ரக ஷெல்களும் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.