மாணவர்கள் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும்!- தீக்குளித்த மாணவன் மரணம்

இந்தியாவின் தமிழ்நாட்டின்  மன்னார்குடியைச் சார்ந்த 25 வயது இளைஞர் விக்னேஷ் கீழ்பாக்கம் தீக்காய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பேரணிக்கு வருவதற்கு முன் தினம் தனது முகநூல் பக்கத்தில் "நாளை நடைபெறும் பேரணியில் பல தற்கொலை (தற்கொடை) போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் TRP Rate ஐ ஏற்றிக்கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன்.

அப்போதாவது மானதமிழ் இனம் கொதித்து எழட்டும்.மாணவர்கள் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும்." என்று எழுதியிருக்கிறார்.முன்கூட்டியே சொன்னபடி நேற்று நடந்த நாம் தமிழர் பேரணியில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் விக்னேஷ்.

எப்படி தீ வைத்தார்?

கேனிலோ, பாட்டிலோ பெட்ரோல் , டீசல், மண்ணெண்ணெய் போன்ற எதையும் கொண்டு வராத விக்னேஷ் உடலில் திடீரென தீர்ப்பிடித்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கூட்டத்தில் இருந்து விலகு தனியாகவே நடந்து சென்ற விக்னேஷ் தீடீரென கூட்டத்திற்குள் தீ வைத்திருக்கிறார். பெட்ரோலில் நன்கு நனைக்கப்பட்ட சட்டை ஒன்றை உள்ளே அணிந்து அதன் மேல் இன்னொரு சட்டையை போட்டுக் கொண்டு , இன்னொரு துணியிலும் பெட்ரோலை நனைத்து வைத்திருக்கிறார். 

அதனால்தான் தீ உடனே அணைக்கப்பட்ட போதிலும் அடர்த்தியான நெருப்பு அவரது வயிறு, நெஞ்சு போன்ற பகுதிகளை எரித்து கடும் தீக்காயத்தை ஏற்படுத்தி விட்டது. 93 % தீக்காயங்களோடு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சுய நினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. நள்ளிரவு திருமாவளவன், அற்புதம்மாள் ஆகியோர் சென்று மருத்துவமனையில் இருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடும்ப பின்னணி

உயிரிழந்த விக்னேஷின் அப்பா பாம்பியன் ஒரு தையல்காரர் அதில் வந்த சொற்பவருமானத்தில் தன் மகனை படிக்க வைத்தார். பாம்பியன் , செண்பகவல்லி தம்பதிகளுக்கு ஒரு மகள், மகன் அதில் மூத்தவர் ஜனனி. மகளுக்கு திருமணம் முடித்த பெற்றோர்கள் மகனைப் பற்றி பெரிய கனவுகளை வைத்திருந்தனர். 

காலை மரணமடைந்த விக்னேஷின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் தலைமையில் அவரது உடல் மன்னார்குடி எடுத்துச் செல்லப்படுகிறது.