பேஸ்புக்கில் அதிக லைக்குகளை வாங்கி சாதித்த ஜனாதிபதி

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், 11 இலட்சம் விருப்புகளைக் கடந்த முதலாவது இலங்கை அரசியல்வாதியென்ற சாதனையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதிவு செய்துள்ளார். அவரது பேஸ்புக் கணக்கு, நேற்று மாலை வரை 1,102,430 விருப்புகளைப் பெற்றுள்ளது.

அவருக்கு ஈடான விருப்புகளைப் பெற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 1,068,970 விருப்புகளைப் பெற்று, இரண்டாவது இடத்தைப் பெற்ற இலங்கை அரசியல்வாதியாகிறார்.

எவ்வாறாயினும், தனது பேஸ்புக் கணக்கில் அதிக விருப்புகளைப் பெற்ற இலங்கையர் என்ற சாதனையை, இலங்கையிலிருந்து பொலிவூட் திரைத்துரைக்குச் சென்ற ஜக்கலின் பெர்ணான்டஸ்ஸே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரையில், 21 மில்லியன் விருப்புகளைப் பெற்றுள்ளார் என்றும் அவருக்கு அடுத்தபடியாக, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார, 4.5 மில்லியன் விருப்புகளைப் பெற்று, அதிக விருப்புகளைப் பெற்ற இரண்டாவது இலங்கையர் என்ற நிலையில் காணப்படுகிறார்.