அச்சுவேலி சிறுவர்கள் சீர்திருத்த பாடசாலையில் ஆளணி பற்றாக்குறை

அச்­சு­வேலி சிறுவர்கள் சீர்­தி­ருத்தப் பாட­சா­லையில் 18 மில்­லியன் ரூபா செலவில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட நிலையம் பொருத்­த­மான ஆளணி வசதி இன்­மையால் பயன்­பா­டின்றியுள்ளது.

கடந்த கால யுத்த நிலை­மையால் முற்­றாக அழிக்­கப்­பட்ட அச்­சு­வேலி சிறுவர் சீர்­தி­ருத்தப் பாட­சாலை 2009 ஆம் ஆண்­டுக்கு பின்னர் முழு­மை­யாக புதிய கட்­டு­மா­னங்­க­ளுடன் செயற்­ப­டு­கின்­றது.

26 ஏக்கர் நிலப்­ப­ரப்பு சிறுவர் சீர்­தி­ருத்தப் பாட­சா­லைக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. சான்று பெற்ற பாட­சா­லையில் 28 சிறு­வர்­களும் தடுப்பு இல்­லத்தில் 16 சிறு­வர்­களும் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

சான்று பெற்ற பாட­சா­லையில் தங்கி இருப்­ப­வர்­களில் ஆறு பேர் அச்­சு­வேலி மத்­திய கல்­லூ­ரியில் அனு­மதி பெற்று கல்வி பயில்­கின்­றனர். அவர்கள் பாட­சா­லைக்குச் சென்று திரும்பும் வசதி மற்றும் அவர்­க­ளுக்­கான மேல­திக கல்வி வச­தி­களை சிறுவர் சீர்­தி­ருத்தப் பாட­சாலை அதிபர் செய்து கொடுத்­துள்ளார்.

சிறு­மி­களை தங்க வைப்­ப­தற்கு 18 மில்­லியன் ரூபா செலவில் புதிய கட்­டடம் கட்­டப்­பட்­டுள்ள போதிலும் பொருத்­த­மான அளவு ஆளணி வசதி இன்­மையால் சிறு­மிகள் சேர்த்துக் கொள்­ளாமல் காத்துக் கிடக்­கின்­றது.

நீதி­மன்­றங்­களில் இனங்­கா­ணப்­படும் சிறு­மி­க­ளுக்­கான சீர்­தி­ருத்த இல்லமாகவும் தடுப்பு இல்­ல­மா­கவும் பயன்­ப­டுத்­து­வதற்கு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கட்டடத்தில் சிறு­மி­க­ளுக்­கான செயற்­பா­டுகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான அளவு பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் புதிய கட்டடம் பயன் பாடின்றி காத்துக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.