தனது சகோதரியை கடத்திய சிவமோகன் எம்.பி

வைத்தியகலாநிதி சி.சிவமோகன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு DMO வாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் கடமையில் இருந்தபோது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு பயணிப்பதற்கான 'அனுமதி அட்டை நடைமுறை' அமுலில் இருந்தது. 

இரவு வேளைகளில் கூட அவசரமாக நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்வது தொடர்பில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், 'நோயாளர்களின் நன்மை கருதி' புலிகளின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவால் கையெழுத்திடப்பட்ட அனுமதி அட்டை சிவமோகனிடம் வழங்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் 1999ம் ஆண்டு சிவமோகனின் சகோதரி ஒருவர் தன்னை விடவும் சாதியில் குறைவான ஒருவரை காதலித்திருந்தார். இந்தவிடயம் சிவமோகனுக்கு தெரியவரவே நோயாளருக்காக வழங்கப்பட்டிருந்த பயண அனுமதி அட்டையை சுயநலமாக தனது தனிப்பட்ட குடும்ப விசயத்துக்காக பயன்படுத்தி நோயாளர் காவுவண்டியில் இரவோடு இரவாக தனது சகோதரியை வவுனியாவுக்கு கடத்தியிருந்தார். 

சாதியை காரணம் காட்டி தனது காதலி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போராளி காதலன் முறையிட்டதையடுத்து, புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு தனது சகோதரியை சிவமோகன் கடத்திய விடயம் புலிகளுக்கு தெரியவரவே, நோயாளர் என்ற போர்வையில் கடத்தப்பட்ட அவரது சகோதரியை மீள அழைத்துவருமாறு சிவமோகன் நிர்ப்பந்திக்கப்பட்டார். 

இதிலிருந்து சிவமோகனுக்கும் - புலிகளுக்குமான 'தெறிக்க விடலாமா' படலம் ஆரம்பமானது. 

நன்றி: ரவிகரா