ஜனநாயக போராளிகள் கட்சி திலீபனுக்கு அஞ்சலி.

இந்திய இராணுவத்தினர் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தில் நிகழ்த்திய வெறியாட்டங்களுக்கு எதிராக ஐந்து அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அன்றைய யாழ்.மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் தியாகதீபம் திலீபன் அவர்கள், நல்லுர் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஒரு சொட்டு உணவுப்பருக்கையோ, நீரோ உட்கொள்ளாமல் 12 நாட்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து உன்னத இலட்சிய விடுதலை பயணத்துக்காக தனது உயிரை ஆகுதியாக்கியிருந்தார்.

திலீபன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவேந்தல் நாளின் முதலாம் நாளான இன்று, அவரது நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்த நல்லுர் அமைவிடத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.