அச்சுவேலியில் தாவரப் பூங்கா அமைப்பு

அச்­சு­வேலி மேற்கில் 12 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் "பூங்­கனி இயல் தாவரப் பூங்கா" யாழ்.மாவட்ட விவ­சாயத் திணைக்­க­ளத்தின் மேற்­பார்­வையில் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

தாவர இயல் பூங்­கா­வுக்­கான நிலப்­ப­ரப்பு கல்லு அகற்­றப்­பட்டு பயிர்ச் செய்­கைக்கு ஏற்ற முறையில் சீர­மைப்பு செய்­யப்­பட்டு வரு­வ­தோடு நிலம் சீர் செய்­யப்­பட்ட பகு­தியில் பழ மரங்கள் நடுகை செய்­யப்­ப­டு­கின்­றன.

தோடை, மா, பலா, பஷன், அம்­பி­றலா, தேசி, மாதுளை, ரகன்வூட் உள்­ளிட்ட பல்­வேறு பழ­ம­ரங்கள் நடுகை செய்­யப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் தோட்டப் பயிர்ச் செய்­கைக்­கான கத்­தரி, மிளகாய், கறி­ மிளகாய், தக்­காளி நல்­லின நாற்­றுக்­களும் மேடை­களில் வளர்க்­கப்­பட்டு விவ­சா­யி­க­ளுக்கு நியாய விலையில் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.

அச்­சு­வேலி மேற்கில் செல்­வ­நா­ய­க­புரம் - கைத்­தொழில் பேட்டை வீதியில் அமைந்­துள்ள பூங்­கனி இயல் தாவரப் பூங்கா திட்ட­மிட்ட பிர­காரம் செயற்­படத் தொடங்கி­யதும் அது விவ­சா­யிகள், பழப் பயிர்ச் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு பயிர்ச் செய்கை கண்­காட்சி மைய­மா­கவும் மாண­வர்­க­ளுக்கு பழப்­பயிர்ச் செய்கை தொடர்­பான பயிற்சி மைய­மா­கவும் தொழிற்­ப­டு­வ­தற்கு ஏற்­ற­முறையில் வடி­வ­மைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

குறித்த பூங்கா தொடர்­பாக யாழ்.மாவட்ட விவ­சாயப் பணிப்­பா­ளர் கி.ஸ்ரீபா­ல­சுந்­தரம் தகவல் தெரி­விக்­கையில், பூங்­கனி இயல் தாவரப் பூங்­கா­வுக்­கான காணி திருத்­தப்­பட்டு நீர்ப்­பா­ச­னத்­துக்­கான குழாய் இணைப்­புகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டு பழ மரங்கள் நடுகை செய்யப்படுகின்றன. இது முழுமையாக செயற்படத் தொடங்கியதும் மாதிரிப் பூங்காவாக விளங்கும் எனத் தெரிவித்தார்.