பளை விபத்தில் பலியானோர் விவரம்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், கயஸ்ரக வாகனத்தில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும் மூவர் படுகாயமடைந்து யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நெல்லியடியை வசிப்பிடமாக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55 வயது மதிக்கத்தக்க ஒருவரும் பலியாகியுள்ளனர். 

வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கயஸ்ரக வாகனமும், யாழிலிருந்து மத்துகமயை  நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றன