துமிந்தவின் அனுதாபம் தேடும் அறுவைச் சிகிச்சைப் படங்கள் வெளியாகின

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஒளிப்படங்களை துமிந்த சில்வாவின் சகோதரி முகநூலில் பதிவேற்றியுள்ளார். 

துமிந்த சில்வா ஸ்ரீ ஜெயவர்தனபுர மற்றும் சிங்கப்பூரிலுள்ள எலிசபெத் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் ஒளிப்படங்கள் உள்ளடங்களாக 17 புகைப்படங்களை அவரது சகோதரி டிலினி சில்வா தனது தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தந்தை தலையில் துப்பாக்கிச்சூட்டுக்காயம் பட்டு இறந்த இறுதி நேர ஒளிப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், துமிந்த சில்வாவின் சகோதரி டிலினி சில்வா, தனது சகோதரன் துமிந்த சில்வா அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளமை கவனிப்புக்குரியது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.