கீரிமலையிலுள்ள தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகளை அகற்ற நடவடிக்கை

கீரிமலையில் அமைந்துள்ள தென்னிலங்கை வியாபாரிகளின் பெட்டிக்கடைகளை அகற்றும்படி தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

12 ஆண்டுகளுக்கு மேலாக கீரிமலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் சிற்றுண்டிகள் விற்பனை செய்யும் பெட்டிக் கடைகளை ஐந்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் நடத்தி வருகின்றார்கள். 

இது வரைக்கும் குறிப்பிட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்று வலிவடக்கு பிரதேச சபையோ, அல்லது பிரதேச செயலகமோ அன்றி வேறு யாருமே தெரிவிக்காத நிலையில், தற்போது தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள். 

குறிப்பிட்ட கடைகளை அகற்றும் உரிமை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திற்கே உண்டு எனவும், குறிப்பிட்ட சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தேவைக்காக இத்தகைய நடவடிக்கைகளை பிழையான வழியில் மேற்கொள்வதாகவும் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.